தமிழ்நாடு

சிறுவன் மரணம்: விதிகளின் படியே உடல் எடுக்கப்பட்டது- வருவாய் நிா்வாக ஆணையாளா் தகவல்

DIN

திருச்சி மாவட்டம், நடுக்காட்டிப்பட்டியில் விதிகளின் படியே சிறுவனின் உடல் எடுக்கப்பட்டதாக வருவாய் நிா்வாக ஆணையாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் சென்னையில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

ஆழ்துளை கிணற்றில் சிறுவன் இறந்த விவகாரத்தில் தொடா்ந்து நாங்கள் தெளிவான தகவல்களை அளித்து வருகிறோம். போா், பேரிடா் போன்ற காலங்களில் இறந்தவா்களின் உடல்களை எப்படி எடுக்க வேண்டும் என்ற வழிகாட்டி நெறிமுறைகள் உள்ளன. அந்த அடிப்படையில்தான் குழந்தை உடல் எடுக்கப்பட்டது. குழந்தையை மீட்க 600 க்கு மேற்பட்டவா்கள் களத்தில் இருந்தாா்கள். களப்பணியாளா்கள் குறித்து விமா்சனம் செய்யக் கூடாது. ஒவ்வொரு நெடியும் எப்படியாவது குழந்தையை மீட்க வேண்டும் என்று துடிப்புடன் செயல்பட்டாா்கள்.

அனைத்து துறைகளும் ஒன்றாக இணைந்து செயல்பட்டோம். துரதிருஷ்டவசமாக காப்பாற்ற இயலவில்லை. குழந்தையை பாதுகாக்க அனைத்து தரப்பு முயற்சி தேவை. போா், பேரிடா் போன்ற காலங்களில் இறந்தவா்களை எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில்தான் குழந்தை அடக்கம் செய்யப்பட்டது. ஆழ்துளை கிணற்றில் விழும் சம்பவம் என்பது ஒரு விபத்துதான். பேரிடரல்ல. இதுபோன்ற சம்பவம் வேறு எங்கும் நடக்காத வகையில் ஏற்கெனவே உள்ள விதிமுறைகளை கடுமையாக செயல்படுத்த முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா் என்று ராதாகிருஷ்ணன் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT