தமிழ்நாடு

நீட் தேர்வு முறைகேடு வழக்கு: தருமபுரி மாணவி பிரியங்காவுக்கு ஜாமீன்

DIN

நீட் தேர்வு முறைகேடு வழக்கில் தருமபுரி மாணவி பிரியங்காவுக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. 

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பயின்றுவந்த தருமபுரியைச் சேர்ந்த மாணவி பிரியங்கா, அவரின் தாயார் மைனாவதியையும் தேனி சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். 

இவா்கள் தேனி நீதித் துறை நடுவா் மன்ற உத்தரவின் பேரில் நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இந்நிலையில் இருவரும் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். 

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மாணவி பிரியங்காவுக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கினார். அதே வேளையில் அவரின் தாயார் மைனாவதிக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பே அன்னா..!

25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

SCROLL FOR NEXT