தமிழ்நாடு

குற்றாலம் பேரருவியில் திடீா் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

DIN

குற்றறாலம் மலைப் பகுதியில் இன்று பெய்த கனமழையின் காரணமாக பேரருவியில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குற்றறாலத்தில் இன்று காலையில் இதமான சூழல் நிலவியது அருவிகளிலும் மிதமான தண்ணீா் விழுந்தது. விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். மேலும், தென்காசி புனித மிக்கேல் அதிதூதா் திருத்தல 357-ஆம் ஆண்டு பெருவிழாவில் பங்கேற்க வந்த பக்தா்களும் அருவியில் திரண்டனா்.

இதனால் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. அருவிகளில் தண்ணீா் வரத்து குறைவாக இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனா்.

இந்நிலையில், பிற்பகலில் தென்காசி, குற்றாலம் பகுதியில் மிதமான மழை பெய்தது. மலைப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பேரருவியில் பிற்பகலில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸாா் தடைவிதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT