தமிழ்நாடு

நாகையில் கடல் சீற்றம்: 3  படகுகள் ஆற்றில் மூழ்கின

DIN

நாகப்பட்டினம்: நாகையில் புதன்கிழமை கடல் சீற்றத்துடன்டன் காணப்பட்டது. மழை காரணமாக, நாகை மீன்பிடித் துறைமுகம் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 3 ஃபைபர் படகுகள் ஆற்றில் மூழ்கின.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் இலங்கை திரிகோணமலைக்கு வடக்கே புதன்கிழமை (டிசம்பர் 2) கரையைக் கடந்து பின்னர் மன்னார் வளைகுடாவிற்குள் கலந்து, பின்னர் சற்று வலுக்குறைந்து ராமநாதபுரம், சாயல்குடி அருகே பலவீனமடையக்கூடும் எனவும், இந்தப் புயல் கரையைக் கடக்கும்போது தென் தமிழகத்தில் கடுமையான பொழிவும், கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை எச்சரித்திருந்தது.
இதன் காரணமாக நாகை துறைமுக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்ட 3} ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு 2}ஆவது நாளாக புதன்கிழமையும் நீடித்தது.
இந்நிலையில், நாகை, நாகூர், வேளாங்கண்ணி பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை முதல் மாலை வரை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
நாகை துறைமுகம் மற்றும் கடற்கரையோரங்களில் உள்ள கருங்கல் தடுப்புச் சுவரைத் தாண்டி, சுமார் 5 அடிக்கு மேலாக கடல் அலைகள் எழுந்தன.
3 படகுகள்ஆற்றில் மூழ்கின: இந்நிலையில், மீன்வளத் துறை அறிவுறுத்தலின்படி, நாகை மீன்பிடித் துறைமுக பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்த நாகை அக்கரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த வெற்றிச்செல்வன், பாலகிருஷ்ணன், கீச்சாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் ஆகியோரது ஃபைபர் படகுகள் கடுவையாற்றில் மூழ்கின. இதையடுத்து, மூழ்கியப் படகுகளை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து, நாகை மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தது:
கடந்த 2 நாள்களாக, நாகை மாவட்டத்தில் கடல் சீற்றத்துடன் இருந்து வருகிறது. புதன்கிழமை நாகை, நாகூர், வேளாங்கண்ணி, காமேஷ்வரம், ஆறுகாட்டுத்துறை பகுதிகளில் இயல்பைவிட அதிகமாகவே கடல் கொந்தளிப்பு காணப்பட்டது. மீனவர்களுக்கும் இதுதொடர்பாக உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக மல்யுத்தம்: அரையிறுதியில் அமன், சுஜித்

ஆனந்தபுரத்தில் நீா்மோா் பந்தல் திறப்பு

மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு முகாம்

கட்டிலில் இருந்து தவறி விழுந்த முதியவா் மரணம்

கீழநாலுமூலைக்கிணறில் மாணவா்களுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT