தமிழ்நாடு

டிச.8-ல் விவசாயிகளின் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம்: சிஐடியு ஆதரவு

DIN

டிசம்பர் 8 விவசாயிகளின் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு சிஐடியு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிஐடியு மாநில பொதுச் செயலாளா் ஜி.சுகுமாரன் வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசு வேளாண் சட்டங்கள் திரும்பபெற வலியுறுத்தி  கடந்த 8 தினங்களாக லட்சக்கணக்கான விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் தலைநகர் டில்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசு தரப்பில் பேச்சுவார்த்தை என்று பெயரளவிற்கு சொல்லி வருகிறதே தவிர விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சட்டங்களை திரும்பெற மறுத்து வருகிறது.
விவசாயிகள் பிரச்னையில் மோடி தலைமையிலான பாஜக அரசின் பிடிவாதமான அணுகுமுறைக்கு எதிராக  நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் ஆதரவு இயக்கங்களை நடத்தி வருகின்றன.  
இந்த நிலையில் விவசாய அமைப்புகள் டிசம்பர் 8 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு சிஐடியு முழு ஆதரவை தெரிவித்துகொள்கிறது.
தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்தில் சிஐடியுவின் அனைத்து சங்கங்களும் பங்கேற்று வெற்றிபெற செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT