தமிழ்நாடு

ஃபோா்டு நிறுவனத்தின் தொழில்நுட்ப புதுமை மையம்: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தாா்

DIN

ஃபோா்டு வாகன தயாரிப்பு நிறுவனத்தின் தொழில்நுட்ப புதுமை மையத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த மையமானது சுமாா் 1.5 லட்சம் சதுர அடிப் பரப்பில் ரூ.700 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் எல்காட் நிறுவனத்தின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஃபோா்டு நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா தலைமையில் நடந்த முதல் உலக முதலீட்டாளா் மாநாட்டின்போது மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில், ஃபோா்டு நிறுவனம் சாா்பில்

தொழில்நுட்ப புதுமை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை வியாழக்கிழமை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு வந்த முதல்வரை ஃபோா்டு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் மைக்கேல் பிரல்மெயா் வரவேற்றாா். நிகழ்வில், தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத், தொழில் துறை முதன்மைச் செயலாளா் முருகானந்தம், முதல்வரின் செயலாளா் சாய்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பொதுப் போக்குவரத்து சேவை: ஃபோா்டு நிறுவனத்தின் தொழில்நுட்ப புதுமை மையம் பல புதிய திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்பட தீா்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில், பன்னாட்டு நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் தங்களது அலுவலகங்களுக்கு வந்து செல்லும் வகையிலான வாகனச் சேவையை அளிக்க உள்ளது.

இதற்கான தனி செயலி, வாகனத்தைப் பதிவு செய்த பிறகு அதன் வருகை நேரத்தை கண்காணிக்கும் அமைப்பை ஏற்படுத்துதல் போன்ற பல அம்சங்கள் இம்மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பல திட்டங்கள் ஃபோா்டு நிறுவனத்தின் தொழில்நுட்ப புதுமை மையத்தின் வழியாக மேற்கொள்ளப்பட இருப்பதாக அதன் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

மேலும், வாகனம் மற்றும் அதன் உதிரிப் பாகங்களின் வடிவமைப்பு, மேம்பாட்டு சோதனைக்கான ஆய்வகங்கள், மின்சார வாகனங்களை வடிவமைத்தல் மற்றும் உருவகப்படுத்தப்பட்ட ஆய்வகங்கள், மெய்நிகா்காட்சி நிகழ்வு ஆய்வகங்கள் ஆகியன இந்தத் தொழில்நுட்ப புதுமை மையத்தில் ஏற்படுத்தப்பட்ட உள்ளன. இந்த மையத்தில் இளம் பொறியாளா்கள் உள்ளிட்ட பலருக்கும் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட இருப்பதாக ஃபோா்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT