தமிழ்நாடு

நடிகர் விஜய்-க்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை: ஹெச். ராஜா பேட்டி 

DIN

நடிகர் விஜய்-க்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தவில்லை என்று பாஜக தேசியச் செயலர் ஹெச். ராஜா  தெரிவித்துள்ளார். 

இன்று மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 'நாங்கள் விஜய்க்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை; படப்பிடிப்பை நெய்வேலி சுரங்கத்தில் நடத்துவதற்கே எதிர்ப்பு தெரிவித்தோம். மேலும், விஜய் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதற்கு பாஜக அரசு காரணமல்ல' என்றார். 

தொடர்ந்து, 'சுயவிளம்பரத்துக்காக பேசிவரும் தமிழருவி மணியன் குறித்து பேச விருப்பமில்லை. 

திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து மத ரீதியான தாக்குதல்களை ஊக்குவிக்கின்றனர். பாதிரியார்களை நிர்பந்தப்படுத்தி குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து வாங்குகின்றனர்' என்று தெரிவித்தார். 

மேலும், சிவ வழிபாட்டை கேலி செய்த சீமான் தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு சென்றது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT