தமிழ்நாடு

திருப்பூர் காய்கறி சந்தை முழு அடைப்பு: 500 வியாபாரிகள் குடும்பத்தினருடன் உண்ணாவிரதம்

DIN

திருப்பூர் தினசரி காய்கறி சந்தை முழு அடைப்பு செய்யப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள தினசரி காய்கறி சந்தையை இடித்து வணிக வளாகம் அமைக்க உள்ளதாக திருப்பூர் மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் தெரிவித்திருந்தார். 

மாநகராட்சியின் இந்த முயற்சியைக் கண்டித்து தினசரி சந்தையில் உள்ள 450 கடைகள் முழு அடைப்பு போராட்டம் மற்றும் 500க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்கள் குடும்பத்தினருடன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டுள்ளனர். 

வியாபாரிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து தினசரி சந்தையை இடிக்கும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT