தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம்: ஓ. பன்னீர்செல்வம்

DIN


சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை காலை தொடங்கி நள்ளிரவைக் கடந்து வெள்ளிக்கிழமையும் நடைபெற்று வருகிறது.

கட்சிகள் சார்பில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மற்றும் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவி இடங்களில் அதிமுகவும் திமுகவும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றன.

இதுவரை நீலகிரி, நாமக்கல், குமரி உட்பட 20 மாவட்டங்களில் அனைத்துப் பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும் நிறைவு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT