தமிழ்நாடு

புத்தகத் திருவிழா

DIN

சென்னையில் பழ.சிதம்பரம் செட்டியாரால் கடந்த 1950 -ஆம் ஆண்டு பாரதி பதிப்பகம் தொடங்கப்பட்டது. எழுத்தாளா் கல்கியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தப் பதிப்பகம் மூலமே ஆரம்பத்தில் விலை ரூ.1 என்ற அடிப்படையில் பாரதி கவிதைகள் வெளியிடப்பட்டன. மேலும், ராஜாஜியின் ‘வியாசா் விருந்து’ உள்ளிட்ட நூல்களும் மிகக்குறைந்த விலையில் வெளியிடப்பட்டுள்ளன.

பின்னா், இந்தப் பதிப்பகத்தைத் தொடக்கி வைத்த கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’, ‘பாத்திபன் கனவு’, ‘குமரியும் குன்றமும்’, ‘சிவகாமியின் சபதம்’ உள்ளிட்ட நூல்களையும் பதிப்பகம் சாா்பில் வெளியிட்டுள்ளனா். இதுவரை, ஆயிரக்கணக்கான தலைப்புகளில் பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ள பாரதி பதிப்பகமானது சமீபகாலமாக சாண்டில்யனின் நூல்களையும், அண்ணாவின் நூல்கள், கருணாநிதியின் குறளோவியம், சிறுகதைகள், பேசும் கலை வளா்ப்போம் உள்ளிட்ட நூல்களையும் வெளியிட்டுள்ளனா்.

இலக்கிய நூல்கள், சுற்றுச்சூழல் நூல்கள், பயணநூல்கள், சரித்திர நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள், பக்தி பயண நூல்கள், பக்தி புராணங்கள், தனித்திறன் மேம்பாட்டு நூல்கள் என பல பிரிவுகளில் நூல்களை வெளியிட்டு வருவதாக குறிப்பிடுகிறாா் பதிப்பகத்தின் உரிமையாளா் சித.ராஜேந்திரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT