தமிழ்நாடு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு: தலைமைச் செயலர் சண்முகம் தலைமையில் உயர்நிலைக் குழு

DIN

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை நடத்த தமிழக அரசின் முதன்மைச் செயலர் சண்முகம் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலர் தலைமையில் 21 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தலைமைச் செயலர் சண்முகம் தலைமையிலான இந்த குழுவில், தமிழகத்தின் நிதி, சுற்றுலாத்துறை உட்பட பல்துறை செயலாளர்கள் உள்ளிட்ட 21 ஐஏஎஸ் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள், தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகளை கவனித்தல், கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் மேற்கொள்வார்கள்.

தஞ்சை பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு 2020, பிப்ரவரி மாதத்தில் குடமுழுக்கு விழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு, இக்கோயிலில் ஓராண்டுக்கும் மேலாக திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT