தமிழ்நாடு

தகவல் பலகை அமைத்து மக்கள் பணி செய்யும் வார்டு உறுப்பினர்

DIN

கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெத்திக்குப்பம் ஊராட்சியின் 4வது வார்டு உறுப்பினர் லோகநாதன் அப்பகுதியில் முக்கிய இடத்தில் தகவல் பலகை அமைத்து மக்கள் பணியாற்றி வருகிறார். 

கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெத்திக்குப்பம் ஊராட்சியின் 4வது வார்டு உறுப்பினர் சமூக ஆர்வலர் லோகநாதன். பெத்திக்குப்பம் பகுதியில் பல்வேறு மக்கள் பணிகளில் இவர் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், இவர் ஊராட்சியில் மக்கள் அதிகமாக கூடும் இரு இடங்களில் தகவல் பலகை அமைத்துள்ளார். இதில் அந்த வார்டில் எந்த பணி, எந்த தேதியில் நடைபெறுகிறது என்ற விபரத்தை அவ்வப்போது குறிப்பிடுகிறார்.

மேலும் ஊராட்சியில் நடைபெறும் அரசு விழாக்கள், அரசு திட்டங்கள் குறித்தும் தகவல்களை அதில் குறிப்பிட்டு வைக்கிறார். அத்தோடு அந்த தகவல் பலகையில் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கவும் இடம் ஒதுக்கி உள்ளார்.

வார்டு உறுப்பினர் லோகநாதனின் இந்த செயல் அப்பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இது குறித்து வார்டு உறுப்பினர் லோகநாதனிடம் கேட்ட போது பதவியை பொருப்பாக நினைத்தே தேர்தலில் போட்டியிட்ட நிலையில், வெளிப்படைத்தன்மையான மக்கள் பணியை பொதுமக்கள் அறியவும், ஊராட்சியின் நிகழ்வுகள், அரசின் நலதிட்டங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளவும் இந்த தகவல் பலகையை ஏற்படுத்தி உள்ளதோடு, பொதுமக்கள் கூறும் குறைகளை ஊராட்சித் தலைவர், துணைத் தலைவரை அணுகி விரைந்து சரி செய்வேன் என்றும் உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழல் பாதிப்பு: தனியாா் ஆலையில் மக்கள் முற்றுகை

வடக்கு-தெற்கு என நாட்டைத் துண்டாட அனுமதிக்க மாட்டோம்: அமித் ஷா

தோ்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

அருணாசல்: முன்களப் பகுதிகளில் பாதுகாப்பு நிபுணா்கள் ஆய்வு நிறைவு

SCROLL FOR NEXT