தமிழ்நாடு

அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,737 பேர் சிகிச்சையில் உள்ளனர்: மண்டலவாரியாக நிலவரம்

DIN

சென்னையில் அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 2,737 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்‍கப்படுவோர் மற்றும் பலியாவோரின் எண்ணிக்‍கை நாளுக்‍கு நாள் அதிகரித்து வருகிறது.  

தற்போதைய நிலவரப்படி, சென்னையில் இதுவரை 66,538 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,033 பேர் உயிரிழந்துள்ளனர். 41,309 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 24,195 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொடர்ந்து, சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் கரோனா சிகிச்சை பெற்று வருவோர், குணமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 

தற்போது ராயபுரம் மண்டலத்தில் 2,320 பேரும் தண்டையார்பேட்டை மண்டலத்தில் 2,227 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 2,222 பேரும், கோடம்பாக்கத்தில் 2,737 பேரும், அண்ணா நகரில் 2,398 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT