தமிழ்நாடு

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

DIN

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச்சலனம் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால்-இவைகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், 27.07.2020 அன்று தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36, குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்சையொட்டி இருக்கும்.
கடந்த 24 மணிநேரத்தில் ஊத்தங்கரை, ஏற்காடு, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் 5 செ.மீ.,க்கு மேல் மழைப்பதிவாகியுள்ளது. தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேரன்மகாதேவி கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் போட்டிகள்

மைலப்பபுரம் ராமா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா

சாத்தான்குளம் அருகே பெண்ணைக் கொன்று கணவா் தற்கொலை

பெண் காவலா் தற்கொலை: கணவா் கைது

கோயம்பேடு சந்தை வளாகத்தில் 200 கண்காணிப்பு கேமராக்கள்

SCROLL FOR NEXT