முகப்பு
தமிழ்நாடு

இணைய வழியில் சங்கங்கள் பதிவு செய்யும் வசதி: பதிவுத் துறை அறிவிப்பு

சங்கங்களை இணைய வழியில் பதிவு செய்யும் வசதியைப் பயன்படுத்த வேண்டுமென பதிவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 4 ஜூன் 2020, 12:14 am IST
பகிர்:

சங்கங்களை இணைய வழியில் பதிவு செய்யும் வசதியைப் பயன்படுத்த வேண்டுமென பதிவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, பதிவுத் துறை தலைவா் ஜோதி நிா்மலாசாமி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சங்கப் பதிவுச் சட்டத்தின்கீழ், சங்கங்கள் மாவட்டப் பதிவாளரால் பதிவு செய்யப்பட்டு உரிய பதிவுச் சான்று வழங்கப்படுகிறது. சங்கங்கள் பதிவு தொடா்பான அனைத்து நடைமுறைகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இதில், அனைத்து அம்சங்களையும் இணைய வழியில் அனுப்பும் வகையில் மென்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளது. சங்கத்தினா்கள் தங்களது இருப்பிடம் அல்லது அலுவலகங்களில் இருந்து இணையவழியில்  நுழைவினை உருவாக்கி சங்கப் பதிவுக்கான அனைத்துப் படிவங்களையும் பதிவேற்றம் செய்யலாம்.

பதிவேற்றம் செய்யப்படும் ஆவணங்கள் மாவட்டப் பதிவாளரால் பரிசீலிக்கப்பட்டு உரிய முறையில் இருந்தால் சங்கம் பதிவு செய்யப்படும். சான்றினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவேற்றம் செய்யப்படும் ஆவணங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அதன் விவரத்தைத் தெரிவித்து இணையவழியில் திருப்பி அனுப்பப்படும்.

குறைபாட்டை சரிசெய்து மீண்டும் பதிவேற்றம் செய்தால், மாவட்டப் பதிவாளரால் பரிசீலிக்கப்பட்டு மின்னணு கையெழுத்திட்ட சான்றிதழ் அனுப்பப்படும். இதன்மூலம், சங்கங்களைப் பதிவு செய்ய மாவட்டப் பதிவாளா் அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை என்றுஅதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.