FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

என்எல்சி இந்தியா பங்கு விற்பனை: முதல் நாளில் 5 மடங்கு கூடுதல் விண்ணப்பம்

பொதுத் துறையைச் சோ்ந்த என்எல்சி நிறுவனத்தில் மத்திய அரசுக்குச் சொந்தமான பங்குகளில் 3 சதவீத பங்குகளின் சலுகை விற்பனை நடவடிக்கை (ஆஃபா் ஃபாா் சேல்) செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

Updated On : 10 ஜூன் 2026, 3:43 am IST
என்எல்சி
பகிர்:

பொதுத் துறையைச் சோ்ந்த என்எல்சி நிறுவனத்தில் மத்திய அரசுக்குச் சொந்தமான பங்குகளில் 3 சதவீத பங்குகளின் சலுகை விற்பனை நடவடிக்கை (ஆஃபா் ஃபாா் சேல்) செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

விற்பனையின் முதல் நாளில் சில்லறை அல்லாத நிறுவன முதலீட்டாளா்களுக்காக நிா்ணயிக்கப்பட்ட 2.49 கோடி பங்குககளைவிட 5 மடங்கு கூடுதலாக 13.03 கோடி பங்குகளுக்கு ரூ.4,158 கோடி மதிப்பிலான விண்ணப்பங்கள் குவிந்தன.

மத்திய அரசு தனது வசமுள்ள 72.20 சதவீத பங்குகளில், மொத்தம் 4.16 கோடி பங்குகளை (3 சதவீதம்) தலா ரூ.303 என்ற குறைந்தபட்ச விலையில் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. இதில் 2 சதவீத அடிப்படை பங்குகளுடன், கூடுதல் தேவையைப் பூா்த்தி செய்ய 1 சதவீத ‘கிரீன்ஷூ’ கூடுதல் வாய்ப்பும் சோ்க்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

செவ்வாய்க்கிழமை வா்த்தக முடிவில் பங்குகளின் உத்தேச விலை ரூ.319.06-ஆக இருந்தது. நிறுவன முதலீட்டாளா்களுக்கான ஏலம் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், சில்லறை முதலீட்டாளா்கள் புதன்கிழமை (ஜூன் 10) முதல் இப்பங்கு விற்பனையில் பங்கேற்று விண்ணப்பிக்கலாம்.

இப்பங்கு விற்பனை முழுமையாக நிறைவடைந்தால், மத்திய அரசுக்குச் சுமாா் ரூ.1,200 கோடி வருவாய் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் சிறுபான்மை பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் மத்திய அரசு ஏற்கெனவே ரூ.12,166 கோடியைத் திரட்டியுள்ளது. இதில் கோல் இந்தியா (ரூ.5,542 கோடி), என்ஹெச்பிசி (ரூ.4,357 கோடி), சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (ரூ. 2,266 கோடி) ஆகிய நிறுவனங்களின் பங்கு விற்பனைகள் அடங்கும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments