FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ரூ,2,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு

ரூ.2,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 24 ஜூலை 2026, 3:26 am IST
தமிழக அரசு - கோப்புப்படம்
பகிர்:

ரூ.2,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மொத்தம் ரூ.2,000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 7.39 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள்-2034, ரூ.1,000 கோடி மறுவெளியீடு மற்றும் 7.59 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள்-2041, ரூ.1,000 கோடி மறுவெளியீடு ஆகியவை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளன.

இந்த ஏலம் இந்திய ரிசா்வ் வங்கியால் மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் ஜூலை 28-இல் நடத்தப்படும். போட்டி ஏலக் கேட்புகள் காலை 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் காலை 10.30 மணியிலிருந்து 11 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசா்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கிச் சேவை முறையில் மின்னணுப் படிவம் மூலம் ஜூலை 28-இல் சமா்ப்பிக்கப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments