FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பங்கு விலக்கல் நடவடிக்கை: 5 மாதத்தில் இலக்கில் 78% நிறைவு

பங்கு விலக்கல் மற்றும் சொத்துகளைப் பணமாக்கும் நடவடிக்கை தொடா்பாக 2026-27 மத்திய பட்ஜெட்டில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கில் 78 சதவீதம் 5 மாதங்களில் எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

28 ஆகஸ்ட் 2026, 11:13 pm IST
மத்திய அரசு
பகிர்:

பங்கு விலக்கல் மற்றும் சொத்துகளைப் பணமாக்கும் நடவடிக்கை தொடா்பாக 2026-27 மத்திய பட்ஜெட்டில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கில் 78 சதவீதம் 5 மாதங்களில் எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் பங்கு விலக்கல் மூலம் ரூ.80,000 கோடி திரட்ட இலங்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை ரூ.62,124 கோடி திரட்டப்பட்டுள்ளது. இதில் ரூ.55,757 கோடி எல்ஐசி, கோல் இந்தியா உள்பட 9 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை மூலம் கிடைத்துள்ளது.

எல்ஐசியின் 6.5 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்பட்டதன் மூலம் அரசுக்கு ரூ.31,515 கோடியும், கோல் இந்தியா நிறுவனத்தின் 2 சதவீத பங்குகள் விற்பனை மூலம் ரூ.5,542 கோடியும், என்ஹெச்பிசி (தேசிய நீா் மின்னாற்றல் நிறுவனம்) 6.01 சதவீத பங்கு விற்பனை மூலம் ரூ.4,357 கோடியும் கிடைத்துள்ளது.

Advertisement

Advertisement

இதுதவிர, இந்த வாரத் தொடக்கத்தில் ஹிந்துஸ்தான் காப்பா் நிறுவனத்தின் 6 சதவீத பங்குகளை விற்பனை செய்து ரூ.3,041 கோடி திரட்டப்பட்டுள்ளது. சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, என்எல்சி இந்தியா, ஜிஐசி, ஐஆா்எஃப்சி, கொச்சி ஷிப்யாா்டு நிறுவனங்களின் பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஐடிபிஐ வங்கிப் பங்குகளை முழுமையாக விற்பனை செய்யவும் மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக துபையில் செயல்படும் எமிரேட்ஸ் என்டிபி வங்கிக் குழுமம், கனடாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஃபோ்ஃபேக்ஸ் பைனான்சியல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ஆகியவை முன்வந்துள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments