ஈரோடு போலீஸ் சோதனைச் சாவடியில் ஆவி நடமாட்டம்?
சிசிடிவி பதிவு காட்சிகளில் தெரியும் உருவத்தால், ஈரோடு அருகே போலீஸ் சோதனைச் சாவடியில் ஆவி நடமாட்டம் இருப்பதாக செய்தி பரவி வருகிறது.
ஈரோடு: சிசிடிவி பதிவு காட்சிகளில் தெரியும் உருவத்தால், ஈரோடு அருகே போலீஸ் சோதனைச் சாவடியில் ஆவி நடமாட்டம் இருப்பதாக செய்தி பரவி வருகிறது.
ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களின் எல்லைப் பகுதியாக கருங்கல்பாளையம் சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனைச் சாவடியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் வெள்ளை நிறத்தில் இரு உருவங்கள் சாலையில் சிறிது தூரம் நகர்வது போன்று காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதுதொடர்பான பதிவுகள் தொலைக்காட்சிகளில் வெளியானது. இதனைப் பார்த்து போலீஸார், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். ஆவி நடமாட்டம் குறித்த தகவல் ஈரோடு, பள்ளிபாளையம் பகுதியில் மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.