தமிழ்நாடு

விழுப்புரத்தில் கரோனாவுக்கு ஓய்வுபெற்ற ஆசிரியர் பலி

DIN

விழுப்புரம் அருகே கரோனா பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஆசிரியர் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார். 

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றில் 812 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் விழுப்புரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார். 

விழுப்புரம் கே கே ரோடு எஸ் பி எஸ் நகர் சோழன் தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற 69 வயது ஆசிரியர், காய்ச்சல் பாதிப்பில் ஜூன்26ஆம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

அண்மையில் அவர் கோயம்புத்தூர் வெளியூர் சென்ற வந்ததால் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் தொற்றில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

SCROLL FOR NEXT