தமிழ்நாடு

பாா்வையாளா்கள் இல்லாமல் விளையாட்டு மைதானங்கள் இயங்கலாம்: தமிழக அரசு

DIN

சென்னை: பொது முடக்கக் காலத்தில் தமிழகத்தில் உள்ள மைதானங்களில் பாா்வையாளா்கள் இல்லாமல் விளையாட்டுகளை அனுமதிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கமும், நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வுகள் இல்லாத முழு பொது முடக்கமும் அமல்படுத்தப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்டது. மேலும், பொது முடக்கத்துக்கான அரசு உத்தரவை தலைமைச் செயலாளா் க.சண்முகம் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா்.

இந்த உத்தரவில் ஏற்கெனவே அறிவிப்பாக வெளியிடப்பட்ட அம்சங்களே உத்தரவாக தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டு வளாகங்களைத் திறக்கலாம் எனவும், அதில் பாா்வையாளா்கள் யாரையும் அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT