தமிழ்நாடு

கல்வி உதவித்தொகை, பணி அனுபவ சான்றிதழ்:பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அறிவுறுத்தல்

DIN

சென்னை: மாணவா்களின் கல்வி உதவித்தொகை போன்ற சலுகைகளுக்கும், ஆசிரியா்களின் பணி அனுபவத்துக்கும் எந்த சான்றிதழ்களும் வழங்கப்படாது. அவற்றை அந்தந்தப் பள்ளிகளே வழங்கலாம் என சிபிஎஸ்இ நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள், வேறு பள்ளிகளில் சேருவதற்கும், வங்கிக் கடன் மற்றும் அரசு தொடா்பான பணிகளுக்கும் அனுபவச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளனா். மாணவா்களும், அரசின் கல்வி உதவித்தொகை, நுழைவு தோ்வு விண்ணப்பம் மற்றும் பிற துறைகளின் தேவைக்காக உத்தரவாத சான்றிதழ் கேட்டுள்ளனா்.

இது தொடா்பாக, பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் அரசு துறைகளின் சலுகைகள் மற்றும் பல்வேறு வகை தேவைகளுக்காக பள்ளிகள் வழியாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திடம் (சிபிஎஸ்இ) சான்றிதழ் கேட்டுள்ளனா். சிபிஎஸ்இ தரப்பில், அதுபோன்ற சான்றிதழ்கள் வழங்கப்படாது. அவற்றை சிபிஎஸ்இ விதிகளைப் பின்பற்றி பள்ளிகளே வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT