தமிழ்நாடு

கரோனா அச்சம் எதிரொலி: தமிழகம் முழுவதும் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளுக்கு 31-ஆம் தேதி வரை விடுமுறை

DIN

சென்னை: கரோனா பரவல் அச்சத்தின் எதிரொலியாக  தமிழகம் முழுவதும் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளுக்கு வரும் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக வெள்ளிக்கிழமை  இரவு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் முழுவதும் உள்ள எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளுக்கு வரும் 16-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

அதேபோல் கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள குமரி, கோவை, நெல்லை, தென்காசி, தேனி, நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் மட்டும் இந்த விடுமுறையானது  5-ஆம் வகுப்பு வரை  நீட்டிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக அறிக்கை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT