தமிழ்நாடு

காளஹஸ்தி கோவிலில் ராகு- கேது பூஜைகள் நிறுத்தம்

DIN

திருப்பதி: கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, காளஹஸ்தி கோயிலில் ராகு-கேது பரிகார பூஜைகள்  நிறுத்தப்பட்டுள்ளதாக அக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக, ஆந்திர மாநிலத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. கோயில் வளாகத்தில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. கரோனா வைரஸ் பரிசோதனை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கோயிலில் தினசரி நடைபெறும் ராகு-கேது பரிகார பூஜையை கோயில் நிர்வாகம் வியாழக்கிழமை முதல், வரும் 31-ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளது. இதை பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT