தமிழ்நாடு

திருப்பதியில் மருத்துவர்களை பணிக்குச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய போலீஸார்

DIN

திருப்பதியில் மருத்துவர்களை பணிக்குச் செல்லவிடாமல் போலீஸார் தடுத்து நிறுத்தியதால் மருத்துவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

கரோனா தொற்று எதிரொலியாக நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. ஆயினும் ஊடகத்துறையினர், மருத்துவர்கள், போலீஸார், சுகாதாரப்பணியாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்டவர்களுக்கு செல்ல மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. அதன்படி திருப்பதி நகர்ப்புற கண்காணிப்பாளர் ரமேஷ் ரெட்டி, மருத்துவர்கள், செவிலியர்கள், போலீஸார், ஊடகத்துறையினர் உள்ளிட்டோருக்கு அனுமதி அளிக்கும்படி பாதுகாப்பு போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில் புதன்கிழமை காலை அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வழக்கம்போல் பணிக்குப் புறப்பட்டனர். ஆனால் சாலைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களை செல்லவிடாமல் தடுத்து நிறுத்தனர். இதனால் கோபமடைந்த மருத்துவர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தற்போது நாடு உள்ள சூழ்நிலையில் மருத்துவர்களின் சேவை முக்கியமானது. தங்கள் பணியைச் செய்யப் புறப்பட்ட மருத்துவர்களுக்கு அனுமதி மறுத்தது. அவர்களின் சேவையை கட்டுப்படுத்துவதாக உள்ளது என்ற கூறினர்.

ஆயினும் போலீஸார் அவர்களை அனுமதிக்காததால், கருடா வளைவு முன் அமர்ந்து மருத்துவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த திருப்பதி எஸ்.பி ரமேஷ் ரெட்டி, அங்கு பணியிலிருந்த போலீஸார் யார் என்று அறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்ட மருத்துவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

'என்மேல் சாதி வெறியன் முத்திரை': வருந்தும் விக்ரம் சுகுமாரன்!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கூடுதல் நேரம் திறப்பு

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

SCROLL FOR NEXT