தமிழ்நாடு

புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் யார்? யார்? விவரம்

DIN


சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

நேற்று வரை தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 50 ஆக இருந்த நிலையில், ஒரே நாளில் இது 67 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா பரவல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னையில் இன்று உயர் அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் நேற்று வரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்த நிலையில், இன்று 67 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 17 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கரோனா பாதித்து ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்தார்.

புதிதாக கரோனா பாதித்தவர்களின் விவரம்..
ஈரோடு மாவட்டத்தில் 10  பேருக்கும், சென்னையில் 4 பேருக்கும், மதுரையில் 2 பேருக்கும், திருவாரூரில் ஒருவருக்கும் புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

கரோனா பாதித்தவர்களின் முழு விவரம்

நோயாளி 51 -  ஆண் 25 வயது (கரோனா பாதித்த நோயாளி 12-ன் குடும்ப உறுப்பினர்) மதுரை, அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி.

நோயாளிகள் 52 - 55 - அமெரிக்காவில் இருந்து திரும்பிய நோயாளி 42 உடன் தொடர்பில் இருந்த சென்னையைச் சேர்ந்த 4 நான்கு பேர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது விவரம் 
(52 வயது பெண்மணி, 76 வயது பெண்மணி, 15 வயது பெண், 20 வயது ஆண்)
நோயாளிகள் 56 - 65: (10 ஆண்கள்) அனைவருமே ஈரோட்டைச் சேர்ந்தவர்கள். அனைவரும் தில்லி சென்று வந்துள்ளனர். தாய்லாந்தைச் சேர்ந்த நோயாளிகள் 5 மற்றும் ஆறுடன் தொடர்பில் இருந்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

நோயாளி 66:
பெண்மணி - 50 வயது. சென்னை பாரிமுனையைச் சேர்ந்தவர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளா.

நோயாளி 67: ஆண் - 42 வயது. குளித்தலையைச் சேர்ந்தவர். தில்லிக்குச் சென்று வந்தவர். கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் தனிமையில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அனைவரின் உடல்நிலையும் சீராக உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT