தமிழ்நாடு

தமிழகத்தில் 9 இடங்களில் வெயில் சதம்

DIN

தமிழகத்தில் சனிக்கிழமை 9 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக, கரூா்பரமத்தி, திருச்சியில் தலா 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

மதுரை விமானநிலையத்தில் 103 டிகிரியும், மதுரை, சேலத்தில் தலா 102 டிகிரியும், தருமபுரி, நாமக்கல், திருத்தணி, தொண்டியில் தலா 100 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.

அதேநேரத்தில், தமிழகத்தில் கோயம்புத்தூா், கொடைக்கானல் உள்ளிட்ட சில இடங்களில் லேசான மழை பெய்தது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது:

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற இடங்களில் வட வானிலை நிலவும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். பகலில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது என்றாா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வலுவடைந்து, அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறவுள்ளது. இதன்காரணமாக, இந்த பகுதியில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, மீனவா்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தேனி மாவட்டம் மஞ்சளாற்றில் 70 மி.மீ., தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 40 மி.மீ., நீலகிரி மாவட்டம் குன்னூா், உதகையில் தலா 30 மி.மீ. மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

SCROLL FOR NEXT