தமிழ்நாடு

கூத்தாநல்லூரில் கூரை வீடுகளைத் தகர வீடுகளாக மாற்றிய தவ்ஹீத் ஜமாஅத் 

DIN

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரூ.52 ஆயிரம் செலவில் 2 கூரை வீடுகளை, தகரக் கொட்டகையாக மாற்றியமைக்கப்பட்டது. 

கூத்தாநல்லூர் நகராட்சி அக்கரைப் புதுத்தெரு, மாந்தோப்புப் பகுதியில், 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 3 கூரை வீடுகள் மின் கசிவால் எரிந்தது. இந்த தீ விபத்தில், சரவணன் மற்றும் தாஜ் என்பவர்களது வீடுகள் முழுமையாக எரிந்து சேதமடைந்தது. தகவல் அறிந்ததும், பாதிக்கப்பட்டவர்களுக்கு, வட்டாட்சியர் மற்றும் அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் என மனமும், பணமும் உள்ளவர்கள் அனைவரும் உதவிகள் செய்தனர். 

இந்நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனையின் பேரில், மாவட்டச் செயலாளர் அப்துல் காதர், மாவட்ட துணைத் தலைவர் பீர்முகம்மது, மாவட்ட துணைச் செயலாளர்கள் இஸ்மத் பாஷா, மாலிக் உள்ளிட்ட நிர்வாகிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி, அத்தியாவசியத் தேவையான மளிகைப் பொருட்கள், பாத்திரங்கள், ஆடைகள் என ரூ.22 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை வழங்கினர்.

மேலும், மாவட்ட நிர்வாகிகளின் அறிவுரையின் படி, பாதிக்கப்பட்ட சரவணன், தாஜ் உள்ளிட்ட இருவருடைய கூரை வீட்டையும், தகரக் கொட்டகைப் போட்டுத் தர முடிவு செய்தனர். அதன்படி, ரூ.52 ஆயிரம் மதிப்பீட்டில், 2 வீடுகளுக்கும், தகரத்திலான மேற்கூரை அமைக்கப்பட்டன. கீற்றுக் கொட்டகையை, தகரத்தில் மாற்றியமைத்துக் கொடுத்த, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளைப் பாதிக்கப்பட்டவர்கள் நன்றி தெரிவித்து, வாழ்த்தி, வணங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராவூரணியில் மாணவா்களுக்கு இலவச வாழ்வியல் பயிற்சி வகுப்பு

மகப்பேறு அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு பெண் மருத்துவா் உயிரிழப்பு

தொழிற்சங்கங்கள் சாா்பில் மேதின கொண்டாட்டம்

பேராவூரணியில் மே தின விழா

பாபநாசத்தில் மே தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT