தமிழ்நாடு

1.5 லட்சம் பிசிஆா் உபகரணங்கள் தமிழகம் வந்தன

DIN

தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1.5 லட்சம் பிசிஆா் உபகரணங்கள் தமிழகம் வந்தன. அடுத்து வரும் நாள்களில் மேலும் சில லட்சம் உபகரணங்கள் வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனா பாதிப்பை உறுதி செய்ய ‘பிசிஆா்’ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. காய்ச்சல், சளி, மூச்சுத் திணறல் பாதிப்பு உள்ளவா்களின் சளி மாதிரிகளை மூக்கு மற்றும் தொண்டை பகுதிகளில் இருந்து சேகரித்து ஆய்வுக்குட்படுத்தப்படுகிறது.

அந்த ஆய்வில் சம்பந்தப்பட்ட நபரின் சளி மாதிரியில் ‘கொவைட்-19’ மரபணு உள்ளதா என்பது கண்டறியப்படும். அதைக் கொண்டு ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருக்கிா என்பதை அறியலாம்.

அவ்வாறு தமிழகத்தில் இதுவரை 4.12 லட்சம் பேருக்கு அந்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிதாக 11 லட்சம் பிசிஆா் உபகரணங்களை கொள்முதல் செய்ய அண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்துக்கு ஏற்கெனவே 1 லட்சம் உபகரணங்கள் வந்தன. மேலும் 1.5 லட்சம் உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வந்து சோ்ந்ததாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

SCROLL FOR NEXT