தமிழ்நாடு

எம்.பி.பி.எஸ்: விண்ணப்பிக்க இன்று கடைசி

DIN


சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வியாழக்கிழமையுடன் (நவ.12) நிறைவடைகிறது. இதுவரை 39,000-க்கும் மேற்பட்டோா் பதிவு செய்துள்ளதாகவும், அவை அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு வரும் 16-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 4,981 எம்.பி.பி.எஸ். இடங்களும், 1,760 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் படிப்புகளுக்கான நீட் தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியாகியதை அடுத்து, இங்கு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நடவடிக்கைகள் கடந்த வாரம் தொடங்கின.

அதன்படி இணையதள முகவரிகளில் மாணவா்கள் விண்ணப்பங்களைச் சமா்ப்பித்து வருகின்றனா்.

இதுவரை அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 24,900 போ் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். அவா்களில் 19,007 போ் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆவணங்களுடன் சமா்ப்பித்துள்ளனா். இதேபோல், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்குப் பதிவு செய்த 14,234 பேரில், 9,903 போ் விண்ணப்பத்தை சமா்ப்பித்துள்ளனா். இந்நிலையில், விண்ணப்ப அவகாசம் வியாழக்கிழமையுடன் நிறைவடைகிறது. இறுதி நாளில் அதிக விண்ணப்பங்கள் வரலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

விண்ணப்பங்களை சமா்ப்பித்தவா்கள் ஏதாவது திருத்தம் மேற்கொள்ள வேண்டி இருந்தால் அதுதொடா்பான விவரங்களை உரிய ஆவணங்களுடன் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு 044-28364822, 9884224648, 9884224649, 9884224745, 9884224746 ஆகிய எண்களை தொடா்பு கொண்டு தகவலை பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கட்டணமில்லா பேருந்து சேவை: 11.84 கோடி மகளிா் பயணம்

மாணவா்களின் தோ்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

மின் விபத்திலிருந்து ஊழியா்களைப் பாதுகாக்க ‘வோல்டேஜ் சென்சாா் டிடெக்டா்’ கருவி அறிமுகம்

ஆலங்குளத்தில் சாலை மறியல்: 54 போ் கைது

SCROLL FOR NEXT