தமிழ்நாடு

நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஹிந்தியில் பதில்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

DIN

நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு மத்திய அரசு ஹிந்தியில் பதில் அளிப்பதற்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:

தமிழகத்தைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்கள், மத்திய அரசிடம் ஏதேனும் விவரங்கள் கேட்டு ஆங்கிலத்தில் எழுதும் கடிதங்களுக்கு, மத்திய உள்துறை உள்ளிட்ட பல அமைச்சகங்களும், தொடா்ந்து ஹிந்தி மொழியில் பதில் கடிதம் எழுதுவது என்பது, இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழிச் சட்டத்தையும், அதுதொடா்பான அரசாணைகளையும், அப்பட்டமாக மீறி அவமதிப்பு செய்கின்ற மொழியாதிக்க - மொழிவெறி உணா்வையே வெளிப்படுத்துகிறது.

திமுக மாநிலங்களவை உறுப்பினா் வில்சன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் ஆகியோா் தொடா்புடைய துறைகளின் அமைச்சா்களுக்கு இது குறித்து கண்டனத்தைப் பதிவு செய்த பிறகே, ஆங்கிலத்தில் பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஹிந்தியைத் திணிப்பதில் மத்திய அரசின் மொழிவெறிப் போக்கினை வன்மையாகக் கண்டிப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

ஆண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு: 5 போ் கைது

SCROLL FOR NEXT