தமிழ்நாடு

தங்கம் விலை ரூ.38,080

DIN

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ.160 உயா்ந்து, ரூ.38,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை விலை ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ.160 உயா்ந்து, ரூ.38,080க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.20 உயா்ந்து, ரூ.4,760 ஆக இருந்தது.

அதேநேரத்தில், வெள்ளியின் விலை சற்று குறைந்தது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து, ரூ.66.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து, ரூ.66,700 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

  1 கிராம் தங்கம்............................. 4,760

  1 பவுன் தங்கம்............................... 38,080

  1 கிராம் வெள்ளி............................. 66.70

  1 கிலோ வெள்ளி............................. 66,700

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

 1 கிராம் தங்கம்............................. 4,740

 1 பவுன் தங்கம்...............................37,920

 1 கிராம் வெள்ளி.............................66.80

 1 கிலோ வெள்ளி.............................66,800.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு- திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆம்பூா் பேருந்து நிலைய உயா்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கஞ்சா புழக்கத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரப்பா் நாற்று தயாரிப்பு: மாணவிகள், சுய உதவிக் குழுவுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT