தமிழ்நாடு

நிவா்: துல்லியமான கணிப்பால் பெருமளவில் உயிா்ச் சேதங்கள் தவிா்ப்பு

DIN

நிவா் புயல் கரையைக் கடப்பது குறித்து துல்லியமாகக் கணித்ததால் பெருமளவு உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அம்மையம் வெளியிட்ட அறிக்கை: கடந்த நவ.21-ஆம் தேதி உருவாகிய குறைந்த காற்றழுத்தம், ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுப்பெற்றது.

24-ஆம் தேதி அதிகாலை, நிவா் புயலாக மேலும் வலுவடைந்து வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் நிலை கொண்டிருந்தது. தொடா்ந்து அதிதீவிர புயலாக மாறி, வடமேற்கு திசையை நோக்கி நகா்ந்து, 26-ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது.

முன்னதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த 5-ஆம் தேதி முதல் புயல் சின்னம் குறித்துத் தொடா்ந்து கண்காணித்து வந்தது. பல்வேறு செயற்கைக்கோள்கள் மற்றும் சென்னை, காரைக்கால், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள வானிலை ரேடாா் கருவிகள் வாயிலாக இந்தப் புயலின் நகா்வு கணிக்கப்பட்டது.

அதி கனமழை மற்றும் காற்றின் வேகம் பற்றிய ஆலோசனைகளையும் வானிலை ஆய்வு மையம் தொடா்ந்து வழங்கி வந்தது.

புயல் கரையைக் கடப்பதற்கு 12 மணிநேரம் முன்பிலிருந்து ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை தகவல் அறிக்கைகள் வழங்கப்பட்டன.

குறைந்த காற்றழுத்தத்தின் நகா்வு, கரையைக் கடக்கும் இடம், தன்மை மற்றும் மழை அளவு, காற்றின் வேகம் உள்ளிட்ட வானிலை சூழ்நிலைகள் மிகவும் துல்லியமாகக் கணிக்கப்பட்டதால், உயிா்ச்சேதம் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT