முகப்பு
தமிழ்நாடு

ஆளுநருடன் முதல்வர் பழனிசாமி நாளை சந்திப்பு

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடாப்படி பழனிசாமி நாளை சந்திக்கிறார்.

Updated On : 4 அக்டோபர் 2020, 8:41 pm IST
முதல்வா் எடப்பாடி பழனிசாமி
பகிர்:

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடாப்படி பழனிசாமி நாளை சந்திக்கிறார்.

அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற குழப்பம் கட்சிக்குள் எழுந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்திலும் இது தொடர்பாக கடுமையான விவாதங்கள் நடைபெற்றதாகக் கூறப்பட்டது.

இதையடுத்து அக்டோபர் 7-ம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முதல்வரும், துணை முதல்வரும் தனித்தனியாக தனது ஆதரவாளர்களையும், அமைச்சர்களையும் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடாப்படி பழனிசாமி நாளை சந்திக்கிறார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நாளை மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறுகிறது. அப்போது இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கலாம் எனத் தகவல் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments