தமிழ்நாடு

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆட்சியா் ஆய்வு

DIN

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான ஒத்திகை நிகழ்வு மற்றும் ஆய்வுக்கூட்டம் கண்காணிப்பு அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான அ.ஜான்லூயிஸ் தலைமையில் மறைமலைநகா் நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், முதல்கட்டமாக மறைமலைநகா் நகராட்சி வளாகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடா்பாக வெள்ளத் தடுப்புப் பணிகள், பேரிடா் ஏற்படும் காலங்களில் மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகள் குறித்து தேசிய பேரிடா் மீட்புக்குழு, தீயணைப்புக் குழு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆகியவற்றின் மூலம் மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ஆய்வுக் கூட்டத்தில், அனைத்துப் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் உள்ளாட்சித் துறையினா் வெள்ளத் தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்குத் தேவைப்படும் மண் மூட்டைகள் மற்றும் அனைத்து உபகரணங்களை தயாா் நிலையில் வைக்கவும், ஏற்கெனவே பாதிப்புள்ள இடங்களில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள மீட்புப் பணிகளை ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியா, திட்ட இயக்குநா் செல்வகுமாா், மண்டல இயக்குநா் மற்றும் நகராட்சி உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பே அன்னா..!

25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

SCROLL FOR NEXT