தமிழ்நாடு

வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுநாளில் அவரைப் போன்ற நெஞ்சுரம் கொள்வோம்: மு.க.ஸ்டாலின்

DIN


வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுநாளில் அவரைப் போன்ற நெஞ்சுரம் கொள்வோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்துள்ளார். 

சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து முதல் குரல் கொடுத்த வீரபாண்டிய கட்டபொம்மனின் 221 ஆவது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 

இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில், வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவப் படத்திற்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவில், “வீரம் விளைந்த நெல்லைச் சீமையில் பிறந்து நாட்டின் விடுதலைக்காய் தன் உடல் பொருள் உயிர் என அனைத்தையும் தந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுநாள் இன்று!

அடக்குமுறைக்கு அஞ்சாத வீரமும், ஆதிக்கத்துக்கு அடிபணியாத தீரமும், கொண்ட கொள்கைக்காக எத்தகைய தியாகமும் - கட்டபொம்மனின் வாழ்க்கைப் பாடங்கள்! அவர் நினைவுநாளில் அவரைப் போன்ற நெஞ்சுரம் கொள்வோம்!” என கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT