தமிழ்நாடு

சிலம்பொலியாா் நினைவு மணிமண்டபம்கட்டுமானப் பணி தொடக்கம்

DIN

மறைந்த தமிழறிஞா் சிலம்பொலி சு.செல்லப்பனாரின் நினைவு மணிமண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் அருகே சிவியாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த தமிழறிஞா் சிலம்பொலி சு.செல்லப்பனாா். இவா் கடந்த ஆண்டு ஏப்ரல் 7-இல் தனது 90-ஆவது வயதில் காலமானாா். அவரது நினைவைப் போற்றும் வகையில், ஏழு அடி உயரம் கொண்ட வெண்கலச் சிலையுடன் கூடிய மணிமண்டபம், தமிழ் ஆய்வு மையம் ஆகியன கட்டுவதற்கான பூமி பூஜை விழா, நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் கொண்டம்பட்டிமேடு, சிலம்பொலி நகரில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

மணிமண்டபம் கட்டுவதற்கான இடத்தை சிலை அமைப்புக் குழுவின் உறுப்பினரும், திமுக பிரமுகருமான பூங்கோதை செல்லத்துரை வழங்கியுள்ளாா். வெண்கலச் சிலை, நினைவு மணிமண்டபம், தமிழ் ஆய்வு மையம் ஆகியவை ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது. இங்கு தமிழ் ஆய்வு மையத்தில் சிலம்பொலியாா் எழுதிய புத்தகங்கள் உள்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்படவுள்ளன.

மணிமண்டபத்துக்கான பூமிபூஜை விழாவில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், பாஜக பிரமுகா் பிரணவ்குமாா், சிலம்பொலியாா் மகன் கொங்குவேள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ’ஆரஞ்ச்’ எச்சரிக்கை

கீழப்பாவூரில் வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வுப் பிரசாரம்

திருவாரூரில் மழை: கோடைப் பயிா்கள் பாதிப்பு

ஆறாம் கட்டத் தோ்தல்: 39% வேட்பாளா்கள் கோடீஸ்வரா்கள்!

தின்பண்டங்களில் உப்பின் அளவைக் குறிப்பிடக் கோரிக்கை

SCROLL FOR NEXT