தம்மம்பட்டியில் காசி விஸ்வநாதர் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை
தம்மம்பட்டி ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் யங் டைமண்ட் கிரிக்கெட் கிளப் சார்பில் 30 ஆவது வருடமாக, ஆங்கிலப் புத்தாண்டு தின சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
தம்மம்பட்டி: தம்மம்பட்டி ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் யங் டைமண்ட் கிரிக்கெட் கிளப் சார்பில் 30 ஆவது வருடமாக, ஆங்கிலப் புத்தாண்டு தின சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
இதற்காக சிவன், பார்வதி, சூரிய பகவான், விநாயகர், முருகன், சிவதுர்க்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், பைரவர், சனீஸ்வரன் ஆகிய விக்கிரகங்களுக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது.
ஆங்கில புத்தாண்டு சிறப்பு அலங்காரத்தில் காசி விசாலாட்சி
Advertisement
Advertisement
இதில் உலக மக்கள் கரோனாவிலிருந்து விடுபட சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. ஒய் டி சிசி கிளப் தலைவர் திருச்செல்வன் தலைமையில் விழா நடைபெற்றது.
ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜையில் பங்கேற்ற திரளான மக்களுக்கு தம்மம்பட்டி சிவன், பார்வதியின்அழகிய , பெரிய வண்ண படங்கள் திருச்செல்வன் வழங்கினார்.
இதேபோல் தம்மம்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.