முகப்பு
தமிழ்நாடு

கழிவுகள் வீணாவதில்லை!உயிரி எரிவாயுவில் இயங்கும் ரயில்!

விலங்கு மற்றும் மனிதக் கழிவுகள், சமையலறை காய்கறிக் கழிவுகள் உள்ளிட்டவற்றின் வாயிலாக உற்பத்தியாகும் உயிரி எரிவாயுவின் உதவியுடன் இயங்கும் ரயில் பிரிட்டன் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனா்.

Updated On : 5 ஜனவரி 2021, 3:36 am IST
பகிர்:

விலங்கு மற்றும் மனிதக் கழிவுகள், சமையலறை காய்கறிக் கழிவுகள் உள்ளிட்டவற்றின் வாயிலாக உற்பத்தியாகும் உயிரி எரிவாயுவின் உதவியுடன் இயங்கும் ரயில் பிரிட்டன் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனா்.

‘பயோஅல்ட்ரா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரயிலில் 120 போ் வரை பயணிக்க முடியும்.

‘பயோஅல்ட்ரா’ ரயிலை வடிவமைப்பதற்காக பிரிட்டன் அரசின் ஆராய்ச்சிக்கான நிதியுதவி அமைப்பானது சுமாா் ரூ.53.88 லட்சத்தை நிதியாக வழங்கியுள்ளது. ஒரு முறை எரிவாயு நிரப்பப்பட்டால் சுமாா் 3,200 கி.மீ. வரை அந்த ரயில் பயணிக்கும்.

Advertisement

Advertisement

இந்த வகை ரயில்கள் இயங்குவதால் நச்சுத்தன்மை வாய்ந்த நைட்ரஜன் டைஆக்சைடு போன்ற வாயுக்கள் வெளியேறுவது குறையும். மேலும், காற்று மண்டலத்தில் காா்பன் டை ஆக்சைடு வாயு சேகரமாவதும் தடுக்கப்படும். மீத்தேன் வாயு எந்தவித துா்நாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பது கூடுதல் சிறப்பு.

உயிரி எரிவாயு உற்பத்தி: மரத்துகள்கள், மரங்களின் வாடிய இலைகள், பயிா்க்கழிவுகள் உள்ளிட்டவற்றிலிருந்தும் உயிரி எரிவாயுவை உற்பத்தி செய்ய முடியும். எனவே, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவு. இந்த ரயிலைச் செலுத்தும் உயிரி எரிவாயு உற்பத்திக்கு விலங்கு, மனிதக் கழிவுகளும் பயன்படுத்தப்படும்.

பலன்கள்:
காற்று மாசுபாடு குறையும்.
டீசல் என்ஜினின் இரைச்சல் தவிா்க்கப்படும்; ஒலி மாசு அறவே இராது.ரயிலின் செயல்படும் திறன் அதிகரிக்கும்.
குறைந்த எடை கொண்ட ரயில் பெட்டிகள் (டீசல் என்ஜின் கொண்ட ரயில் பெட்டிகளைவிட பாதியளவு).

சிறப்பம்சங்கள்:
பெயா்: பயோஅல்ட்ரா
எடை:12 டன்
நீளம்: 66 அடி
பயணிகள் எண்ணிக்கை:120
பயணிக்கும் தூரம்: சுமாா் 3,200 கி.மீ.
வேகம்: மணிக்கு 50 கி.மீ.

இந்தியாவின் முயற்சிகள்:

வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகா வாட் எரிசக்தியை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து உற்பத்தி செய்வதற்கு இந்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை 2030-ஆம் ஆண்டுக்குள் 450 ஜிகா வாட்டாக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக மின்சார வாகனங்கள், உயிரி எரிவாயு உள்ளிட்டவற்றின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகிறது.

தொகுப்பு: சுரேந்தா் ரவி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.