முகப்பு
தமிழ்நாடு

தூத்துக்குடியில் 300 கிலோ கடல் அட்டை மினி லாரியுடன் பறிமுதல்

தூத்துக்குடி அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ கடல் அட்டை மினி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. 

Updated On : 5 ஜனவரி 2021, 4:36 pm IST
பகிர்:

தூத்துக்குடி அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ கடல் அட்டை மினி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. 

தூத்துக்குடி லூர்தம்மாள் பகுதியில் உள்ள  தனியாருக்கு சொந்தமான குடோன் ஒன்றின் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த மினி லாரியில் இரவு ரோந்து பணிக்குச் சென்ற தாளமுத்து நகர் காவல்துறையினர் அங்கு நின்ற மினி லாரியை சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 300 கிலோ எடையுள்ள கடல் அட்டைகள் இருப்பது தெரியவந்தது.

இரவு நேரத்தில் அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததால் கடல் அட்டை இருந்த வாகனத்தின் குடோன் காவலாளியை பிடித்து சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Advertisement

Advertisement

சுமார் எட்டு மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகள் மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்த தாளமுத்து நகர் காவல் நிலைய போலிசார் காவல் நிலையத்திற்கு கொண்டுசென்று இந்த கடல் அட்டைகள் எங்கே பிடிக்கப்பட்டது எங்கு கொண்டு செல்வதற்காக வைக்கப்பட்டிருக்கிறது என்ற கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.