முகப்பு
தமிழ்நாடு

கம்பம் பாசனப்பரப்பில் இரண்டாம் போக நெல் நாற்றங்கால் நடும் பணி துவக்கம்

தேனி மாவட்டம் கம்பம் பாசனப்பரப்பில் இரண்டாம் போக நெல் நாற்றங்கால் நடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

Updated On : 7 ஜனவரி 2021, 3:38 pm IST
பகிர்:

தேனி மாவட்டம் கம்பம் பாசனப்பரப்பில் இரண்டாம் போக நெல் நாற்றங்கால் நடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பாசன பரப்பில், 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் பாசன நிலங்கள் உள்ளன. இவற்றில் முதல் போக நெல் சாகுபடி முடிந்த நிலையில், தற்போது  இரண்டாம் போக சாகுபடிக்கு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

கம்பம் சின்னவாய்க்கால், குளத்து பாசனம், உத்தமுத்து பாசன பரப்புகளில் பரம்படித்தல், நெல் நாற்றங்கால் பயிரிடுதல், நடவு  நடும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. 

Advertisement

Advertisement

இது குறித்து வாய்க்கால் பாசன பரவு விவசாயி மா.அய்யப்பன் கூறியது,

கம்பம் பாசன நிலங்களாக வாய்க்கால் பரவு, குளத்து பரவு, உத்த முத்து ஆகிய பாசன பரப்புகளில் இரண்டாம் போக சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அணையில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments