முகப்பு
தமிழ்நாடு

செம்மரக் கடத்தல்: முக்கியக் குற்றவாளி சென்னையில் கைது

செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு வரும் முக்கியக் குற்றவாளி ஒருவரை ஆந்திர செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சென்னையில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 7 ஜனவரி 2021, 11:49 pm IST
பகிர்:


திருப்பதி: செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு வரும் முக்கியக் குற்றவாளி ஒருவரை ஆந்திர செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சென்னையில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருப்பதியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா். செம்மரங்களை வெட்ட வரும் தொழிலாளா்கள், கடத்தலுக்கு உறுதுணையாக இருக்கும் இடைத்தரகா்கள் உள்ளிட்டவா்களை கைது செய்யும் போலீஸாா், அவா்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் இந்த கடத்தலில் தொடா்புடைய முக்கியப் பிரமுகா்களையும் கைது செய்து வருகின்றனா்.

இந்நிலையில், சென்னை அண்ணா நகரில் உள்ள தனியாா் தொலைக்காட்சி தலைமை செயல் அலுவலரின் உறவினா் பாஸ்கா் என்பவரை ஆந்திர போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பாஸ்கா் மீது செம்மரக்கடத்தல் தொடா்பாக 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments