பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவி காலம் நீட்டிப்பு: ஆளுநர் உத்தரவு
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவி காலத்தை நீட்டித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவி காலத்தை நீட்டித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.
பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பேராசிரியர் குழந்தைவேல் பணியாற்றி வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு துணைவேந்தராக பதவி ஏற்ற இவரின் மூன்றாண்டு பதவி காலம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில் மறு உத்தரவு வரும் வரையில் அல்லது புதிய துணைவேந்தர் நியமிக்கும் வரை அவரை துணைவேந்தராக பதவியில் தொடர அனுமதித்து தமிழக ஆளுநரும் பெரியார் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.