உசிலம்பட்டியில் வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பொய் வழக்குப்பதிவு செய்யும் டிஎஸ்பி ராஜாவை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி வழக்குரைஞர்கள் சங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பொய் வழக்குப்பதிவு செய்யும் டிஎஸ்பி ராஜாவை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி வழக்குரைஞர்கள் சங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவல் துணை கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) பணியாற்றி வருபவர் ராஜன் (45). உசிலம்பட்டி வழக்கறிஞர்கள் சங்கம் இவரது தூண்டுதலின் பேரில் காவல் நிலையங்களில் வழக்குரைஞர்களைத் தொடர்ந்து அவதூறாகப் பேசி வருவதாக வழக்குரைஞர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும் உசிலம்பட்டி மற்றும் செக்காணூரணி காவல்நிலையத்தில் டிஎஸ்பி ராஜன் தூண்டுதலின் பேரில் இரண்டு வழக்குரைஞர்களின் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்து வழக்குரைஞர் சங்கத் தலைவர் வீரபிரபாகரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் நீதிமன்றத்திலிருந்து பேரணியான வந்து உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
இதனால் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் காவல்துறை கண்காணிப்பாளருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும், தமிழக அரசு டிஎஸ்பி ராஜனை உடனடியாக பணியிடை மாற்றக் கோரியும் கோஷங்களை எழுப்பியும் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.