முகப்பு
தமிழ்நாடு

ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு

கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் ஏழுகிணறு ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. 

Updated On : 8 ஜனவரி 2021, 6:13 pm IST
பகிர்:

சர்வதேச மனித உரிமைகள் குற்றத்தடுப்பு அமைப்பு மற்றும் டாக்டர் அன்புசுந்தரம் அறக்கட்டளை இணைந்து சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் ஏழுகிணறு ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வினை நடத்தினார்கள்.

எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடி போக்குவரத்து ஆய்வாளர் அருள்தாஸ் கேட்டுக் கொண்டதன் பேரில் சர்வதேச மனித உரிமைகள் குற்றத்தடுப்பு அமைப்பு மற்றும் டாக்டர் அன்புசுந்தரம் அறக்கட்டளை இணைந்து எளாவூர் ஏழுகிணறு ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்விற்கு சர்வதேச மனித உரிமைகள் குற்றத்தடுப்பு அமைப்பின் மாநில தலைவர் எஸ்.அன்பு சுந்தரம் தலைமை தாங்கினார்.

நிகழ்வில் செங்குன்றம் போக்குவரத்து அலுவலக சாலை போக்குவரத்து அலுவலர்  இளமுருகன்,  போக்குவரத்து ஆய்வாளர்கள் அருள்தாஸ், காவேரி முன்னிலை வகித்தனர்.

Advertisement

Advertisement

நிகழ்வில் போக்குவரத்து விதிகள் குறித்து சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு  துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மேலும் தலைக்கவசம் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள், இருக்கை பட்டை அணியாமல் சென்ற கார் ஓட்டுனர்கள் நிறுத்தப்பட்டு தலைக்கவசம், சீட் பட்டையின் நன்மைகள் விளக்கப்பட்டு அவர்களிடம் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதே போல அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கும் பிரத்யேகமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்வில் சர்வதேச மனித உரிமைகள் குற்றத்தடுப்பு அமைப்பின் தெற்கு மண்டல மாநில தலைவர் டி.மாரிதுரை,மாநில செயலாளர் டாக்டர் திருமலை, அறங்காவலர் லட்சுமி நாராயணன், கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை குழு தலைவர் தேவேந்திரன், தேவகுமார்,ஸ்ரீதரன், முனைவர் தமிழ்செல்வன், அருண்குமார், ராஜ்குமார், மணிகண்டன், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள்  தினேஷ்குமார், கோகுல், சுதாகர், சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments