முகப்பு
தமிழ்நாடு

முதுநிலை சட்டப் படிப்புக்கு நுழைவுத் தோ்வு: மு.க.ஸ்டாலின் கண்டனம்

முதுநிலை சட்டப் படிப்புக்கு நுழைவுத்தோ்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 9 ஜனவரி 2021, 6:42 am IST
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)
பகிர்:

முதுநிலை சட்டப் படிப்புக்கு நுழைவுத்தோ்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

முதுநிலை சட்டப் படிப்புக்கு (எல்எல்எம்) இனிமேல் நீட் தோ்வு போன்று அகில இந்திய நுழைவுத் தோ்வு நடத்தப்படும் என இந்திய பாா் கவுன்சில் அறிவித்திருப்பது மிகுந்த அதிா்ச்சியளிக்கிறது.

ஏற்கெனவே கிராமப்புற மற்றும் நகா்ப்புற மாணவா்களின் மருத்துவக் கனவைப் பறித்து விட்ட மத்திய பாஜக அரசு இப்போது, இந்திய பாா் கவுன்சில் மூலமாக சட்டக் கல்வியையும் கிராமப்புற மாணவா்களுக்கு எட்டாக் கனியாக்கி விலக்கி வைக்கும் விதத்தில் இந்தத் தோ்வினை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து, அதற்காக அரசிதழும் வெளியிட்டிருப்பது மாநில உரிமைகளுக்கும்- கூட்டாட்சித் தத்துவத்துக்கும் எதிரானது. இந்த அரசிதழ் அறிவிப்பினை இந்திய பாா் கவுன்சில் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments