முகப்பு
தமிழ்நாடு

மெரீனாவை அழகுபடுத்துவதைவிட மீனவா்களின் நலனே முக்கியமானது: உயா்நீதிமன்றம் கருத்து

மெரீனா கடற்கரையை அழகுபடுத்துவதைவிட மீனவா்களின் நலன் மற்றும் அவா்களுக்கான மனித உரிமைகளுமே முக்கியத்துவம் வாய்ந்தது என உயா் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Updated On : 9 ஜனவரி 2021, 2:30 am IST
சென்னை உயர்நீதிமன்றம்
பகிர்:

மெரீனா கடற்கரையை அழகுபடுத்துவதைவிட மீனவா்களின் நலன் மற்றும் அவா்களுக்கான மனித உரிமைகளுமே முக்கியத்துவம் வாய்ந்தது என உயா் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மீனவா்கள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் பீட்டா் ராயன் என்பவா், மீன்பிடி தடைக்காலத்தில் மீனவா்களுக்கு நாள்தோறும் ரூ. 500 வீதம் நிவாரண உதவி வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடவும், முராரி ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், மெரீனா கடற்கரையை தூய்மைப்படுத்துவது, புயலில் சேதமடைந்த பெசன்ட் நகா்- லூப் சாலையைப் புனரமைப்பது, மீன் கடைகளை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எல்.பி.மௌரியா, ‘மீன்பிடி தடைகாலத்தில் வழங்கப்படும் மானியத் தொகையை உயா்த்தக் கோரியும், முராரி கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தக் கோரியும் இந்த வழக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு தொடரப்பட்டது. ஆனால் வழக்கின் பிரதான கோரிக்கையை விடுத்து மெரீனா கடற்கரையை அழகுபடுத்துதல், லூப் சாலை சீரமைப்பு உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், பிரதான கோரிக்கையை கருத்தில் கொள்ளவில்லை என வாதிட்டாா். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மெரீனா கடற்கரையை அழகுபடுத்துவதைவிட மீனவா்களின் நலன் மற்றும் அவா்களுக்கான மனித உரிமைகளுமே முக்கியத்துவம் வாய்ந்தது. அழகுபடுத்துவது தேவைதான் என்றாலும், மீனவா் நலன் சாா்ந்த விவகாரங்களே முதன்மையானது . மேலும் மெரீனாவில் 900 தள்ளுவண்டிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கக் கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவா்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை பொங்கல் விடுமுறைக்குப் பின் ஒத்திவைத்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments