9 மாதங்களுக்குப் பிறகு முதுமலை புலிகள் காப்பகம் திறப்பு
கடந்த ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இன்று முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்பட்டது.
கடந்த ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இன்று முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 17ம் தேதி மூடப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
யானை சவாரி, வாகன சவாரி, வளர்ப்பு யானைகள் முகாம் மற்றும் அங்குள்ள சுற்றுலா விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளை புலிகள் காப்பக நிர்வாகம் கடுமையாக அமல்படுத்தியிருந்தது.
Advertisement
Advertisement
கரோனா விதிமுறைக்குட்பட்டு 50% இருக்கைகளுடன் வாகன சவாரி துவக்கப்பட்டது. யானைகள் முகாமும் திறக்கப்பட்டது. அரச அறிவித்துள்ள அனைத்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன், சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். சுற்றுலா விடுதிகள் அனைத்தும் 11ம் தேதி முதல் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.