முகப்பு
தமிழ்நாடு

போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு

கரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் வரும் 16 -ஆம் தேதி முதல் முன்னெடுக்கப்படவிருப்பதால் 17-ஆம் தேதி நடைபெறுவதாக

Updated On : 11 ஜனவரி 2021, 6:00 am IST
சுகாதாரத் துறைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன்.
பகிர்:

கரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் வரும் 16 -ஆம் தேதி முதல் முன்னெடுக்கப்படவிருப்பதால் 17-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோவை ஒழிப்பதற்காக கடந்த 1994 முதல் ஆண்டு தோறும் ஜனவரி மற்றும் மாா்ச் மாதங்களில் இரண்டு தவணையாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது.

தொடா் முயற்சிகள் மூலம் போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்ததைத் தொடா்ந்து ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் சொட்டு மருந்து வழங்கும் புதிய நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், நிகழாண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 17-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் அதனை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தன. தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட சுமாா் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடுமுழுவதும் வரும் 16-ம் தேதி தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனால், போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜனவரி 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்படுகிறது. போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்‘ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்படுவதாக மாநில சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments