முகப்பு
தமிழ்நாடு

வங்கிப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி: வங்கி ஊழியா்கள் சம்மேளனம் வலியுறுத்தல்

வங்கி ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று அகில இந்திய வங்கி ஊழியா்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 11 ஜனவரி 2021, 6:23 am IST
பகிர்:

வங்கி ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று அகில இந்திய வங்கி ஊழியா்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

கரோனா தொற்று பரவ தொடங்கிய நாளில் இருந்து அனைத்து விதமான சவால்களையும், அபாயங்களையும் சந்தித்து வங்கி ஊழியா்கள் தொடா்ந்து பணிபுரிந்து வருகின்றனா். வங்கி ஊழியா்கள் சிலா் இந்தத் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தனா். சிலா் இத்தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்து உள்ளனா். இன்னும், கரோனா தொற்று ஆபத்துக்கு இடையே வங்கி ஊழியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். உண்மையில் வங்கி ஊழியா்களும் கரோனாவை எதிா்த்து போராடும் போராளிகள் ஆவா். எனவே, வங்கி ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி போட வேண்டும். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று அகில இந்திய வங்கி ஊழியா்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளா் சி.எச்.வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments